புதிய படத்தில் பவித்ரா லக்ஷ்மி! பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்

1 month ago 23
செய்திக்கு கிரிக்கெட் செய்திக்கு செயலிக்கு

இயக்குநர் கார்த்திகேயன் வேலப்பன் படத்தில் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டான குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்ட பவித்ரா ஜூன் 16 ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடினார். 

அவருக்கு சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரும் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பவித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.  

அந்தவகையில், இயக்குநர் கார்த்திகேயன் வேலப்பன் இயக்கும் புதிய படத்தில் நடிகை பவித்ரா லக்ஷ்மி நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பவித்ராவின் பிறந்தநாள் சர்பிரைஸாக கொடுத்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவித்ராவை வாழ்த்தியுள்ள பதிவில், ஹேப்பி பர்த் டே பவித்ரா லக்ஷ்மி, உங்களுடைய கனவுகள் அனைத்தும் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள். 

விமானிகள் சார்ந்து நான் எடுக்க இருக்கும் திரைப்படத்தில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.


மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்