மனைவியுடன் மீண்டும் இணைந்த நடிகர் ரஞ்சித் - குவியும் வாழ்த்துகள்

1 month ago 73
செய்திக்கு கிரிக்கெட் செய்திக்கு செயலிக்கு

தமிழ் திரையுலகில் 90களில் பிரபலமாக இருந்த நடிகர் ரஞ்சித் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப் பூவே சீரியலில் நடித்து வருகிறார். 

ஆ.கே.செல்வமணி தயாரித்த பொன் விலங்கு படத்தின் மூலம் அறிமுகமாகி, சிந்து நதி பூ, மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

இயக்குநர் சேரனின் பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ரஞ்சித், மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார். நட்புக்காக, தர்மா படங்களில் வில்லனாக நடித்து தனி முத்திரை பதித்தார்.


நேசம் புதிது படத்தில் நடிக்கும்போது, தனக்கு ஜோடியாக நடித்த பிரியா ராமனை காதலித்த அவர், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 

பிரியா ராமன், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான வள்ளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்த அவருக்கு, ஒரு கட்டத்தில் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் மலையாள திரையுலகுக்கு சென்ற அவர், பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். 

திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்ட பிரியா ராமன், கணவர் ரஞ்சித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2014 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் இருவரும் தொடர்ந்து நட்பில் இருந்து வந்தாலும் பொதுவெளியில் ஒன்றாக தோன்றவில்லை. இந்நிலையில், அவர்கள் இருவரும் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது திருமண நாளில் இணைந்துள்ளனர். 

இந்த புகைப்படத்தை பிரியா ராமன் மற்றும் நடிகர் ரஞ்சித் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். அன்பு தங்கங்களில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளால், வாழ்க்கை பயணம் மிகவும் அழகாகிறது என நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

பிரியா ராமன் மற்றும் ரஞ்சித் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்