லண்டனில் சொந்தமாக பெரிய வீடு வாங்கினாரா குஷ்பூ... வெளியான தகவல்

2 years ago 416

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.  குஷ்பூ சமீபத்தில் லண்டனுக்கு சென்று இருக்கிறார். 

இந்நிலையில் குஷ்பூ ட்விட்டரில் தனது புது வீட்டில் காபி குடிப்பதாக குறிப்பிட்டு இரண்டு போட்டோக்களை பதிவிட்டார். அதனால் அவர் லண்டனில் சொந்த வீடு வாங்கிவிட்டார் என செய்தி பரவியது.

அதற்கு கோபமாக விளக்கம் கொடுத்து இருக்கும் அவர் 'வீட்டை வாடகைக்கும் எடுக்கலாம் என யாரும் கேள்விப்பட்டதே இல்லையா' என அவர் கேட்டிருக்கிறார்.