முதலில் சினிமா… அப்புறம் தான் ஹனிமூன்.! மஞ்சிமா அதிரடி

2 years ago 217

நடிகர் கெளதம் கார்த்தி மற்றும் நடிகை மஞ்சுமா மோகன் ஆகியோர் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள்.

இவர்களது திருமணம் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் குறிப்பிட்ட சில சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். 


இந்த நிலையில், தற்போது திருமணம் முடிந்த கெளதம் கார்த்தி மஞ்சுமா மோகன் ஹனிமூனுக்காக எங்கே செல்வார்கள் என்ற கேள்வியை சமீபத்திய பேட்டி ஒன்றில் மஞ்சுமா மோகனிடம் கேட்டுள்ளனர். 

அதற்கு பதில் அளித்த அவர் இப்போது உடனே ஹனிமூன் செல்ல திட்டமிடவில்லை. கௌதம் நடித்துவரும் “பத்துதல” பட வேலைகள் நிறையவுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது ஹனிமூன் செல்ல முடிவு செய்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.