லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகிய கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் கவனிக்கப்பட்டது. இவர்களுக்கு இணையாக இன்னொரு கதாபாத்திரமும் விக்ரம் படத்தில் பேசப்பட்டது. அதாவது ஏஜென்ட் டீனா என்ற கதாபாத்திரம் தான்.
அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவர் நிஜப் பெயர் வசந்தி. இவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சினிமா துறையில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். விஜய் அஜித் படங்களில் கூட வசந்தி குரூப் டான்ஸ் இல் ஆடியுள்ளார். கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டருடன் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
மேலும் தினேஷ் மாஸ்டருடன் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக வசந்தி பணியாற்றிவருகிறார். இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தினேஷ் மாஸ்டர் மூலமாக தான் கிடைத்துள்ளது. பல வருடங்களாக சினிமாவில் இருந்தும் தன்னை யாருக்கும் தெரியவில்லை என்ற வருத்தத்தில் வசந்தி இருந்துள்ளார்.
அதையெல்லாம் போக்கும் படி விக்ரம் படத்தில் வசந்திக்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் சூட்டிங் ஸ்பாட்டிலேயே கமல் வந்ததும் அவரைப் பார்த்து பயந்து ஓடி விட்டாராம். அதன்பிறகு லோகேஷ் வசந்திக்கு உங்களால் முடியும் என தைரியம் கூறியுள்ளார்.
அதன்பின்பு கமலிடம் வசந்தி லோகேஷ் கனகராஜ் அறிமுகம் செய்து வைத்த பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக வசந்திக்கு பயம் தெளிந்து ஒழுங்காக நடித்தாராம். வசந்தி இப்படத்தில் கிட்டத்தட்ட 16 நாட்கள் நடிக்கிறாராம். மேலும் ஐந்திலிருந்து ஆறு நாட்கள் சண்டை காட்சி எடுக்கப்பட்டதாம்.
விக்ரம் படத்தில் பல பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் அவர்களைத் தாண்டி வசந்தியின் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தின் மூலம் வசந்தியின் நடிக்க பல வாய்ப்புகள் வரும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.