பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும்,அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார்.
அதன் பின் பாலாஜி ரன்னராக அறிவிக்கப்பட்டார்.கடந்த 3 சீசன்களையும் ஒப்பிடுகையில் சீசன்-4 தான் மிகவும் எரிச்சலை உண்டாக்கியதாகவும், சுவாரசியம் இல்லை என்றும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர் .
இந்த நிலையில் சீசன்-4 முடிந்து ஒரு சில தினங்களே ஆன நிலையில் அடுத்த சீசனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளதாக விஜய் டிவி வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது .
சீசன்-4 ஆனது கொரோனா பிரச்சினை காரணமாக தான் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிக்பாஸ் சீசன்-5யும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று கூறுவதுடன் அதற்கான போட்டியாளர்களையும் மும்மரமாக தேர்வு செய்யும் பணிகளில் விஜய் டிவி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சீசனில் இருந்த எதிர்வினை கருத்துகள் அனைத்தையும் வருகிற சீசனில் மாற்ற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.