சினிமா பிரபலங்கள் படங்களை தவிர மற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு சம்பாதித்தும் வருகிறார்கள். அந்தவகையில் விளம்பரப்படங்களிலும் போஸ்டர்களிலும் நடித்து காசு சம்பாதித்தும் வருகிறார்கள்.
அப்படி ஒரு விளம்பரத்தில் நடித்து சிக்கி தவிர்த்து வருகிறார்கள், இந்திய கிரிக்கெ வீரர் விராட் மற்றும் நடிகை தமன்னா.
சமீப காலமாக ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதனை தொடர்ந்து ஆன் லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்து மத்திய அரசு தீவரமாக பரிசீலனை செய்து வருகின்றது.
நிலைமை இப்படி இருக்க, நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இப்படியான சூதாட்ட விளையாட்டுகளுக்கு விளம்பரம் நடித்துக்கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இது இளைஞர்கள் தவறாக வழி நடத்தும்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கேட்டும், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானவை என்றும், பிரபலங்களாக இருப்பவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், போலி வாக்குறுதிகளுடன் பார்வையாளர்களை ஈர்த்ததாகவும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோலி, தமன்னா, அஜூ வர்கீஸ் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.