ஆஸ்கார் ரேஸில் இணைந்த சூரரை போற்று திரைப்படம்... அதிகாரப்பூர்வமான தகவல்!

4 years ago 192

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த  நவம்பர் மாதம்  சூரரை போற்று வெளியானது.

G.R.கோபிநாத் என்பவற்றின் வாழ்க்கையை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்றது.

தற்போது சூரரை போற்று திரைப்படத்தை சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கார் விருதிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு டுவிட்டரில் அறிவித்துள்ளது.