“தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தார்.
இடையே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்றார். இவர் 2016ஆம் ஆண்டு தொகுப்பாளர் ஸ்ருதி பாஸ்கர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
நடிகர், நடன இயக்குனர் என்பதை தாண்டி நகுல் ஒரு நல்ல பின்னணி பாடகரும் கூட. இவர் பாடிய பாடல் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.காதல் யானை - அந்நியன்
X-மச்சி Y-மச்சி - கஜினி
மஞ்சள் வெயில் மாலையிலே - வேட்டையாடு விளையாடு
கற்க கற்க - வேட்டையாடு விளையாடு
ஹூரே ஹூரே - வல்லவன்
நாக்கு முக்க - காதலில் விழுந்தேன்
எப்படி என்னுள் காதல் - கந்த கோட்டை
நகுலா - வல்லினம்
லிவ் த மூமென்ட் - கதை திரைக்கதை வசனம் இயக்கம்