இன்னும் 13 நாட்களில் தல ரசிகர்கள் அட்டகாசம் ஆரம்பம்..!

4 years ago 205

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார் . அதற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு அப்டேட்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே அஜித் அவர்கள் பைக்கிலையே பல இடங்களுக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட வாரணாசியில் உள்ள ரோட்டு கடைக்கு சென்று அந்த உரிமையாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டு அந்த கடையில் சாப்பிட்டதாக ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் அதனை தொடர்ந்து வலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறும்பொழுது அங்குள்ள ஒரு இட்லீ கடை உரிமையாளரின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு 1 லட்சம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து தற்போது வலிமை படத்தை பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. 

வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்னும் 13 நாட்களில் முடிந்து விடும் அதற்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் வரிசையாக வரும் அதற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்கள் அட்டகாசம் தான்.