முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகா, சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
மகளிர் மட்டும், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் என அடுத்தடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தார்.
தற்போது இவர் நடிப்பில் உடன்பிறப்பே திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகை ஜோதிகா, தற்போது முதன்முறையாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தன்று இமயமலையில் 70 கிலோமீட்டர் தூரம் டிரெக்கிங் சென்றுள்ளார் ஜோதிகா. அந்த வீடியோவை தான், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.