சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என ரஜினி திரைப்பட பாடல் வரியைப் போல் இப்போதெல்லாம் சொல்லுங்கண்ணே... சொல்லுங்க என்று சொன்னால் இமான் அண்ணாச்சி என பச்சை குழந்தையும் சொல்லிவிடும்.
இமான் அண்ணாச்சிக்கு பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம். இவர் முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான ‘கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ என்னும் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு வந்தார்.
தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்குகொண்ட இமான் அண்ணாச்சி தனது வித்யாசமான மொழிநடையால் அனைவரையும் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தார்.
தொடர்ந்து சன் டிவியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே போனவர், இப்போது அங்கு சீனியர் அண்ணாச்சி என்னும் நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார்.
இதுபோக பல படங்களிலும் சிறந்த நகைச்சுவை நடிகராக பட்டையை கிளப்பி வருகிறார் இமான் அண்ணாச்சி. பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக இருக்கிறார் இமான் அண்ணாச்சி!
இமான் அண்ணாச்சியை இப்போது தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் எல்லாருக்குமே தெரியும். இப்போது முதன் முதலாக இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே என்ன அழகான குடும்பம்? எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்.