தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கடைசியாக ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.
தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் வேலையில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடிந்தவுடன் இந்த படத்திற்கான வேலையில் சேர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகர், நடிகைகளை வைத்து இயக்க திட்டமிட்ட உள்ளதாகவும், அதனை 2021-ல் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது .
அதிலும் கன்னடத்திலிருந்து யாஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்ததாக ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த பிரமாண்ட படத்தில் தெலுங்கிலிருந்து பிரபாஸ், தமிழிலிருந்து விஜய் சேதுபதி மற்றும் மலையாளத்திலிருந்து ஃபகத் பாசில் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரியவரும்.