பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் திகதி அவரின் நிலைமை மோசமானது. இதையடுத்து அவர் ஏப்ரல் 29ம் திகதி மரணம் அடைந்தார்.
இர்ஃபான் இறந்து இன்றுடன் ஓராண்டாகிவிட்டது. இந்நிலையில் இர்ஃபான் பற்றி அவரின் மகன் பாபில் கான் கூறியதாவது,
அப்பாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த கடைசி இரண்டு நாட்கள் நான் அங்கு தான் இருந்தேன். அவர் சுயநினைவை இழந்து கொண்டிருந்தார். என்னை பார்த்து, சிரித்துவிட்டு, நான் சாகப் போகிறேன் என்றார்.
அதை கேட்ட நானோ, இல்லை அப்பா என்றேன். மீண்டும் சிரித்துவிட்டு தூங்கிவிட்டார் என்றார். தந்தை இறந்த பிறகு தான் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் அம்மா தனக்கு பக்கலமாக இரு்தார் என்றும் பாபில் கான் கூறியுள்ளார்.
இர்ஃபான் பற்றி அவரின் மனைவி சுதாபா நேற்று இரவு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது, கடந்த ஆண்டு இந்நேரம் நானும், என் நண்பர்களும் மருத்துவமனையில் உங்களுக்கு பிடித்த பாடல்களை பாடிக் கொண்டிருந்தோம்.
ஒருவரின் கடைசி நேரத்தில் மக்கள் பக்திப் பாடல்களை பாடுவதை பார்த்து பழக்கப்பட்ட நர்ஸுகள் நாங்கள் பாடிய பாடல்களை கேட்டு ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.
இரண்டு ஆண்டுகளாக உங்களை பத்திரமாக பார்த்துக் கொண்டேன். உங்களின் நேரம் முடியப் போகிறது என்று டாக்டர்கள் என்னிடம் கூறியதும் நீங்கள் சந்தோஷமாக செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
அதனால் தான் உங்களுக்கு பிடித்த பாடல்களை பாடினோம். மறுநாள் நீங்கள் எங்களை விட்டுவிட்டு அடுத்த ஸ்டேஷனுக்கு சென்றுவிட்டீர்கள். நான் இல்லாமல் எங்கு இறங்குவது என்பது உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன் என்றார்.