விஜயகுமாரின் மகள் வனிதா அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டிய வில்லத்தனத்தில் தமிழகமே கடுப்பானது. அந்த அதிருப்தி அடங்குவதற்குள் பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்.
பீட்டர்பாலுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இதனிடையே பீட்டர் பாலின் முதல்மனைவி எலிசபெத்தின் பஞ்சாயத்தும் ஓடியது. இவைகளுக்கு மத்தியில் பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி வந்து சிகிட்சை பெற்று திரும்பியது தனிக்கதை.
அதன் பின் தன் கணவர் பீட்டர்பாலையும் அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் கோவாவுக்கு இன்பசுற்றுலா போனார் வனிதா. ஆனால் கோவாவில் இருந்து வந்ததுமே இருவரும் பிரிந்துவிட்டனர்.
பீட்டர் பால் சிகரெட் பிடிப்பது, திடீரென தொற்றிக் கொண்ட குடிபழக்கம், பொய் சொல்வது, நெஞ்சுவலி வந்தபின்னும் புகை பிடித்தது என புகாரை அடுக்கினார் வனிதா. அந்த சம்பவத்துக்குப் பின்பு கொஞ்சம் அடக்கியே வாசித்து வந்தார் வனிதா விஜயகுமார்.
இந்நிலையில் வனிதா விஜயகுமார் இப்போது திடீரென ஹீரோயினாக வேஷம் கட்டுகிறார். பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆடம் தாசன் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கருக்கு, உதவியாளராக இருந்தவர். முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தப்படத்துக்கு அனல்காற்று என பெயர் வைத்துள்ளனர்.
இந்த ப்படத்துக்காக தன் உடல் எடையை நச்சென குறைத்திருக்கிறார் வனிதா விஜயகுமார். இந்தப்படத்தின் பூஜை ஆரம்பித்துவிட்டதாக வனிதா விஜயகுமார் தன் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.