ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தார் மனைவி சாய்ரா பானு!

1 day ago 15

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்து செல்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1995ம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்தார். திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில், ரஹ்மானை, அவரது மனைவி சாய்ரா பானு பிரிந்து செல்வதாக ஆங்கில மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இது தொடர்பாக அவரது வக்கீல் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி ஆங்கில செய்தி சேனல் கூறியதாவது:

திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து, கணவர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை சாய்ரா பானு எடுத்து உள்ளார். இந்த முடிவானது தங்கள் உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில உணர்ச்சிபூர்வமான அழுத்தத்திற்கு பிறகு ஏற்பட்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் இந்த தம்பதியினருக்கு இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவாகியது. 

இந்த இடைவெளியை யாராலும் சரி செய்ய முடியாது. ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவது என்ற வேதனை மற்றும் சோகமான முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார். 

இந்த சவாலான நேரத்தில், வாழ்க்கையில் கடுமையான காலகட்டத்தை கடந்து செல்லும் தங்களின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பு அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...