நடிகர் அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து அதே கூட்டணியில் தற்போது வெளியாகியுள்ள படம் 'வலிமை'.
அஜித் ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்பிற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் 'வலிமை' படம் வெளியாகி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை வெளியாகியுள்ள இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வருகிறது. இதுவரை வெளியான படங்களின் வசூலை எல்லாம் 'வலிமை' படம் முந்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளனர் 'வலிமை' படக்குழுவினர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப்படத்தில் அஜித் ஜோடியாக தபுவும், மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ‘ஏகே 61’ படத்தில் அஜித் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்தப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக புகைப்படம் எல்லாம் வெளியாகி இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து தற்போது அவரே ஹீரோவாகவும் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.