ஒரே மாதத்தில் விஜய் சேதுபதியின் நான்கு திரைப்படங்கள் வெளியீடு –நீங்க எதுக்கு வெயிட்டிங்??

3 years ago 144

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. 

இவர் நடித்துள்ள படங்களில் நான்கு திரைப்படங்கள் செப்டம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது.

அதாவது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப்படம் செப்டம்பர் 9-ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது. 

இதனையடுத்து செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று தர்பார் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகிறது. அடுத்த நாளே OTT-ல் வெளியாக உள்ளது.

மேலும் டாப்சி உடன் இணைந்து நடித்துள்ள அனெபல் சேதுபதி என்ற திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக OTT-ல் வெளியாக உள்ளது. 

மேலும் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படமும் செப்டம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.