ஆட்டோகிராப் படத்தில் லலிதாவாக வந்து ரசிகர்களை கட்டி போட்டவர் நடிகை கோபிகா. இதனை தொடர்ந்து கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்.மகன் போன்ற பல படங்களில் நடித்தார்.
சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். 1985ம் ஆண்டு பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே பரத நாட்டியம் கற்றவர்.
ஆட்டோகிராப்பில் ஆரம்பித்த கோபிகாவின் கேரியர் கிராப் படிப்படியாக உயரத்தைத் தொட்டது. கனா கண்டேன் படத்தில் லேசு பாசாக கவர்ச்சி காட்டப் போய், விமர்சனத்துக்கு ஆளானார் கோபிகா.
இதனால் விசனப்பட்ட கோபிகா தமிழைக் குறைத்துக் கொண்டு தாயகமான மலையாளத்திற்கே திரும்பினார். மலையாளத்தில் முழு மூச்சாக நடித்து வந்த அவர் இடையில் எம் மகன், வீராப்பு என தமிழிலிலும் தலை காட்டினார்.
தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2008ல் அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், குழந்தைளுடன் அதே அழகில் இருக்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.