நடிப்புத்திறமைக்காக பேசப்படும் நடிகர்களில் நிச்சயம் கமலஹாசன் பெயர் தான் முதலிடத்தில் இருக்கும்.
அவ்வளவு படங்கள், வித்தியாசமான ரோல்கள், பல விதமான நடிப்புகள் என அவர் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
ஆனால் அவரே பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகர் என்றால், அது மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தான். அவர் நடித்த ரெட்ட படத்தை பார்த்து தான் வியந்ததாக கமல் கூறியிருக்கிறார்.
இரட்டை ரோலில் அவர் நடித்திருந்த நிலையில் அதில் வித்தியாசம் தெரிந்திருக்கும் என கூறிய கமல், "ஜோஜூ ஜார்ஜ் நீங்கள் நான் பார்த்து பொறாமைப்படும் நடிகர்களில் ஒருவர்" என அவர் கூறி இருக்கிறார்.