காஜல் அகர்வால் திருமணத்துக்குப் பிறகு எடுத்த முக்கிய முடிவு!!

4 years ago 137

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால் புதிதாக ஒரு திரைப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார். 

பிரபு தேவா நடித்த குலேபகாவலி படத்தை இயக்கியவர் கல்யாண். இவர் இயக்கும் அடுத்த படத்தில்தான் காஜல் தற்போது ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இத்திரைப்படம் தான் பிரபு தேவாவுடன், காஜல் நடிக்கும் முதல் திரைப்படமாகும். அதோடு, திருமணத்துக்குப் பிறகு காஜல் அகர்வால் முதலாவதாக ஒப்பந்தமாகும் படம் இது .

படம் குறித்து விசாரித்தால், ரொமான்டிக் காமெடி ஜானராக இருக்கும் என்று சொல்கிறார்கள். விரைவிலேயே இத்திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.