இயக்குனர் பாசில் இயக்கத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி வெளியான திரைப்படம் காதலுக்கு மரியாதை.
இந்த திரைப்படத்தில் விஜய் - சாலினி நடித்து இருந்தனர். இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சங்கிலி முருகன் வேணு ரவிச்சந்திரன் ஆகியோர் தயாரித்தனர்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து விஜய்க்கு ஒரு வெற்றித் திரைப்படமாக இருந்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் முதன் முதலாக விஜய் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் அப்பாஸ் தான் நடிக்கவிருந்தாராம், ஆனால் சில காரணங்களால் நடிக்காமல் போகிவிட்டதாம்.