காலமான நடிகர் பாண்டியன் வெற்றிப்படங்கள் எதுதெரியுமா! லிஸ்ட்ல இந்த இயக்குநர் படமா!

3 years ago 617

சினிமாவில் கொடிக்கட்டி பறந்த பிரபலங்கள் கூட ஒருசில காரணங்களால் காணமல் போய் அடையாளம் தெரியாமல் போவது உண்டு.  80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் பாண்டியன்.

1983ல் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருந்தார் பாண்டியன்.

கடைசியாக புதுசு கண்ணா புதுசு என்ற படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே வருடமே உடல் நலக்குறைவால் மதுரையில் மரணமடைந்தார்.

மரணத்திற்கு என்ன காரணம் என்று பலர் கூறி வந்த நிலையில், நண்பர்களுடன் எப்போது விடாமல் அவர்களுக்காக வாழ்ந்தும் வந்தார். ஆனால் அப்படி இருந்த பாண்டியன் பணம் இல்லாத நேரத்தில் நண்பர்கள் கூட உதவி செய்யாமல் கை நழுவி விட்டார்களாம்.

மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய பாண்டியனின் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

அவர் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் 5 முக்கியமான படங்கள் இருக்கிறது. மண்வாசனை படம் இயக்குநர் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியாகி பாண்டியன், ரேவதி ஜோடியாக நடித்து அன்றைய காலத்திலேயே 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.

மனைவி சொல்லே மந்திரம் ராம நாராயணன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற முழு காரணமாக அமைந்தார் பாண்டியன்.

ஆண் பாவம், குரு சிஷ்யன் படங்கள் பெரிய படங்களாக உருவாகி பெரிய ஹிட் கொடுத்தது. கிழக்குச் சீமையிலே படம் விஜயகுமார், நெப்போலியன் நடிப்பில் உருவாகி குடும்ப கதையாக அமைந்தது. பாண்டியன் ரசிகர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்றால் அது கிழக்குச் சீமையிலே மட்டுமே.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...