வல்லவன் படத்தில் வந்த இந்த பெண்ணை நிச்சயம் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள் தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வரும் சிம்பு இயக்கி நடித்த வல்லவன் திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்து இருந்தது.
வல்லவன் படத்திற்கு முன்பாகவே ‘மன்மதன்’ படத்தின் கதாசிரியராக சிம்பு அவதாரம் எடுத்தார். அந்த படம் சிம்பு தான் இயக்கினார் என்று கூட அப்போது பேசப்பட்டது.
ஆனால், அந்த படத்தை இயக்கியது ஏஜே முருகன் தான். படத்திற்கு பின்னர் வெளியான தொட்டி ஜெயா, சரவணா என்ற இரண்டு படங்களும் சிம்புவிற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
பின்னர் வல்லவன் படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கினார் சிம்பு. இந்தப் படத்தில் நயன்தாரா ரீமாசென் என்று இரண்டு நாயகிகள் நடித்திருந்தார்கள் அதேபோல இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் சந்தியா சிம்புவின் பள்ளி தோழனாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் தான் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது என்றும் சொல்லலாம். அதிலும் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் காமெடிகளை இன்றளவும் மறக்க முடியாது.
அதிலும் குறிப்பாக ஒரு காட்சியில் ரீமா சென்னை தேடி சிம்பு, சந்தானம் மற்றும் காதல் சுகுமார் ஆகிய மூவரும் அவர் படிக்கும் ஒரு பெண்கள் பள்ளிக்கு செல்வார்கள்.
அப்போது சந்தானம் ஒரு பேப்பரை ஒரு மாணவி மீது தூக்கி எறிவார். அந்த காட்சி இன்றளவும் பிரபலம் தான். இப்படி ஒரு நிலையில் பல ஆண்டுகள் கழித்து அந்த காட்சியில் நடித்த நடிகையுடன் எடுத்த புகைப்படங்களை காதல் சுகுமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘வல்லவனில் ..ஸ்கூல் போர்ஸனில் நகைச்சுவை காட்சி ஒன்றில் சந்தானம் பேப்பரை தூக்கி எறிய அதை எடுக்கும் மாணவி “என்னா வெறும் பேப்பரை தூக்கி எறியுற.. எதாச்சும் எழுதிக்குடு” என்று அதகளம் பண்ணியிருக்கும்.
சமீபத்தில் நான் கதை நாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் ஒரு காட்சியில் நடிக்க கொடைக்கானல் வந்திருந்தாள். எனக்கு அடையாளமே தெரியவில்லை.
இன்னும் நடிப்பில் பட்டைய கெளப்பும் அவளுக்கு ஏனோ சரியான வாய்ப்புகள் அமையாமல் காதல் கல்யாணம் பண்ணியவளுக்கு இரண்டு பிள்ளைகள்.. இப்போது கணவனால் கைவிடப்பட.. ஓலா டாக்ஸி ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள்.
எல்லா கார்களையும் அனாசயமாக ஓட்டுகிறாள்.முடிந்தவரை வாய்ப்புகள் சொல்வதாக சொல்லியிருக்கிறேன்.வாய்ப்புகள் அமையட்டும் லக்ஷ்மி.