கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் 43 வயதில் ரோஜாக்கூட்டம் பூமிகா வெளியிட்ட புகைப்படம்

3 years ago 490

தமிழ் சினிமாவின் ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் பிஸியாக நடித்து வந்தார்.


தமிழில் தளபதி விஜயுடன் பத்ரி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட பூமிகா தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.

தற்போது 43 வயதாகும் இவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வயதிலும் மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.