சிம்புவை கட்டியணைத்து பாராட்டிய பெண் இயக்குனர் – வைரலாகும் புகைப்படங்கள்

3 years ago 383

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் மாநாடு. 

இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கிய சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நான்கே நாளில் 30 கோடியை தாண்டி படம் லாபத்தைக் கொடுத்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படம் பார்த்து பாராட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் பிரபல பெண் இயக்குனரான சுதா கொங்கரா மாநாடு படத்தை பார்த்து சிம்புவை கட்டியணைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.