சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை.!

4 years ago 219
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். தற்போது சூர்யாவின் 40-வது படத்தினை குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது .இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தில் நடித்து வருவதும் ,இது தமிழில் அவரது முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது .