தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களின் படங்களிலும் காமெடி நடிகராக பிஸியாக நடித்து வந்தவர் ஜனகராஜ். ஆரம்ப காலத்தில் சினிமாவில் கஷ்டப்பட்டாலும் சொந்த வாழ்க்கையில் எந்த கஷ்டமும் படாமல் வாழ்ந்து வந்துள்ளார்.
ஜனகராஜ் வசதி வாய்ப்பு உள்ள ஒரு மனிதர். அதாவது தேனாம்பேட்டையில் அவருக்கு சொந்த வீடு அப்போதே இருந்துள்ளது. அவர் வீட்டிற்கு அருகில் தான் பாரதிராஜா மற்றும் கலைமணி போன்றோர் வாடகைக்கு குடியிருந்து உள்ளனர். பாரதிராஜாவை பார்த்துவிட்டு இவரைப்போலவே சினிமாவில் சாதிக்க வேண்டுமென ஜனகராஜ் ஆசைப்பட்டு உள்ளார்.
அதன்பிறகு ஜனகராஜ் சினிமாவிற்குள் வந்துள்ளார். முதலில் மெட்ராஸ் பாஷை மிக அருமையாக பேசியதால் இயக்குனர்கள் பலரும் இவரை படத்தில் நடிக்க வைக்க முன் வந்தனர். அதன்பிறகு தனது வித்தியாசமான நடிப்பு திறமையை காட்டி தொடர்ந்து பல வாய்ப்புகளை பெற்றார்.
இவருக்கு காரில் ஒரு ஆக்சிடென்ட் ஆகி உள்ளது உயிர் பிழைத்து மீண்டும் வந்துள்ளார். கண்ணில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதால் தான் அவருக்கு ஒரு கண் சற்று சிறிதாகவே இருக்கும். ஆனால் அதையே படத்தில் வித்தியாசமாக காட்டி நடித்திருப்பார்.
பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த ஜனகராஜ் குடிக்கு அடிமையாகி உள்ளார். அப்போதெல்லாம் வருவோர் போவோருக்கு எல்லாம் சரக்கு வாரி வழங்குவாராம்.
அதிலிருந்து மீண்டு வருவதற்கு பல காலங்கள் கஷ்டப்பட்டு உள்ளார். பின்பு எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளார். இவர் கடைசியாக 96 படத்தில் வாட்ச் மேனாக நடித்திருந்தார்.