அன்றைய கால சினிமாவிற்கும் தற்போது உள்ள சினிமாவிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. சில நல்லது, கெட்டதும் இதில் அடக்கம். அதில் ஒன்று தயாரிப்பு நாட்கள்.
அன்றைய நாட்களில் சரியான திட்டமிடலுடன் குறுகிய காலத்தில் படப்பிடிப்புகள் முடிந்து விடும். இப்போது வருட கணக்கில் ஒவ்வொரு படமும் இழுத்து கொண்டு செல்கிறது.
பழைய நடிகர்கள் இதன் மூலம் ஒரு வருடத்திற்கு குறைந்தது மூன்று நான்கு படங்களிலாவது நடித்து விடுவர். அதிலும் ஒரு தமிழ் நடிகர் சாதனை படைத்துள்ளார் என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று தான். அவர் தான் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ஜெயசங்கர்.
அப்படி என்ன சாதனை என நினைக்கிறீர்களா..? அவர் ஏழு வருடத்திலேயே தனது 100 படங்களை நடித்துள்ளாராம். இதனை அந்த கால நடிகர், நடிகைகளே வியந்து பார்த்துள்ளனர். அவரின் முதல்படமே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.
இத்தகைய நடிகர் மீது எம்ஜிஆருக்கு ஒரு கோவம் உண்டாம். அது ஜெயலலிதா விஷயத்தில் தான் என கூறப்படுகிறது. மற்ற படங்களை காட்டிலும் ஜெய்சங்கர் மற்றும் ஜெயலலிதா நடிக்கும் காதல் காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் ஜெயசங்கர் நடிக்கும் பெரும்பாலான படத்தில் ஜெயலலிதா தான் ஜோடியாக இருந்துள்ளார். இது தான் எம்ஜிஆரின் கோவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.