தனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்தவர்களை விளாசி ட்வீட் போட்டுள்ளார் நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான விந்தியா.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஹ்மான் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான சங்கமம் படம் மூலம் நடிகையானவர் விந்தியா.
தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவரை படங்களில் காண முடியவில்லை.
அரசியல் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதிமுகவில் சேர்ந்தார் விந்தியா. அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரான விந்தியா, அக்கட்சியின் ஸ்டார் பேச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
விந்தியா திடீர் என மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறி யாரோ கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.
அதை பார்த்த விந்தியா அந்த போஸ்டர்களை ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி.
ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா என தெரிவித்துள்ளார்.