தமிழ்த்திரையுலகில் குழந்தை, சிறுவர்களாக வந்த பலரும் பின்னாளில் பெரிய நடிகர்களாக வலம் வந்துள்ளனர்.
மாஸ்டர் மகேந்திரன் தொடஙி சீரியல் புகழ் நீலிமா வரை அனைவரும் உழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் தான். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என கூறி நடித்த மீனா, அதே ரஜினிக்கே ஜோடியாக நடித்தார்.
அதேபோல் 1980களில் சிறுவனாக தமிழ் சினிமாக்களில் அதிகமாக நடித்த காஜா ஷெரீப்பை யாருமே மறக்கமுடியாது.
இயக்குனர் பிளஸ் நடிகருமான பாக்கியராஜ் நடித்த அந்த ஏழு நாள்கள் படத்தில் பாக்யராஜ் பாலக்காட்டு மாதவன் என்னும் கேரக்டரில் நடித்தார்.
இதில் அவரோடே படம் முழுவதும் சிஸ்யனாக டோலாக் வாசிப்பவராக பயணித்தவர் தான் காஜா ஷெரீப். தொடர்ந்து சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் இரண்டாவது மகனாக நடித்தார்.
இவரை ‘இரண்டாம் கமல்ஹாசன்’ என இயக்குனர் பாலசந்தர் புகழ்ந்திருக்கிறார். இப்போது வயதாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் காஜா செரீப்.
இப்போது சினிமா வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இப்போது துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழ் நடிகர், நடிகைகளை அழைத்துப் போய் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.