தளபதி 66 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?

4 years ago 261

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தினை தொடர்ந்து இவர் அடுத்ததாக தளபதி 65 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திலே நெல்சன் திலிப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகின்றன. 

இந்த படத்தினைத் தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

தற்போது வெளியாகி உள்ள தகவல் ஒன்றின் படி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தினை மைத்ரேயி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.