மலையாளத்தில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சஜி சுரேந்திரன். இவ விவஹிதரயால் என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதையடுத்து ஹாப்பி ஹஸ்பண்ட்ஸ், ஃபோர் பிரண்ட்ஸ், குஞ்சலியன், ஷீ டாக்ஸி போன்ற படங்களை இயக்கினார்.
இயக்குனர் சஜி கடந்த 2005 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஆண்டு சங்கீதா கர்ப்பமானார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிற்கு வாரிசு வரப்போவதை எதிர்பார்த்து குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சங்கீதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், சஜி – சங்கீதா தம்பதிக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் இயக்குனர் சஜி பதிவு செய்துள்ளார்.
குழந்தை வரத்திற்காக 16 ஆண்டுகளாக ஏங்கி வந்த சஜி சுரேந்தர்- சங்கீதா தம்பதிக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக ஏக்கத்துடன் இருந்தவர்களுக்கு குழந்தை பிறந்ததால் அதுவும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதால் கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.