தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா பாரதியை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என கூறியதை தொடர்ந்து இருவரும் பீச்சில் சந்தித்துக் கொண்டனர்.
அப்போது கண்ணம்மா என்னுடைய குழந்தையை காணவில்லை என கூறினார். இப்போ உன் பொண்ணு உன்கிட்ட இல்லையா எனக் கேட்க இது எட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது என கூறுகிறார்.
குழம்பிப்போன பாரதி நீ என்ன சொல்ற எனக் கேட்டார். நமக்கு பிறந்தது இரண்டு குழந்தை என கூறுகிறார். நான் இரண்டாவது குழந்தையை பற்றி இதுவரைக்கும் அகிலன் அத்தை மாமா அஞ்சலி என எல்லோரிடமும் கேட்டிருக்கிறேன்.
ஆனால் யாரும் எனக்கு தெரியாது என கூறுகின்றனர். அதன் பிறகுதான் வெண்பா என்னிடமிருந்து உன்னுடைய இரண்டாவது குழந்தையை நான் தான் ஒருவரிடம் கொடுத்து வளர்கிறேன் என கூறினார்.
உன்னை விவாகரத்து செய்தால் தான் அந்த குழந்தையை கொடுப்பேன் என கூறுகிறார். வெண்பா குறித்து கண்ணம்மா கூறியதை கொஞ்சமும் பாரதி நம்பவில்லை. நீ பொய் சொல்லி வெண்பா மேல பழி போடுற என திட்டினார். உனக்கு பிறந்தது ஒரு குழந்தை தான்.
உனக்கு பிரசவம் பார்த்தது நான்தான். உன்னுடைய குழந்தையை முதன் முதலாக கையில தூக்கியது நான்தான் என கூறுகிறார். முதலில் பாரதி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்ணம்மா ஆனால் அதை நம்ப மறுக்கிறார். அப்போது என் மேல அதிக வெறுப்பும் கோபமும் உங்களுக்கு இருந்தது. என்னை சமாதானப்படுத்தி அனுப்ப இப்படி பொய் சொல்றீங்களா என கேட்டார்.
பாரதி நடந்ததை கூறினார். அதன்பின்னர் உண்மையிலேயே உனக்கு இரட்டை குழந்தை படிச்சா இல்ல இரண்டாவது அவன் கூட குழந்தையை பெத்துக்கிட்டியா என கேட்கிறார். கோபமான கண்ணம்மா பாரதியிடம் ஆவேசப்படுகிறார். பாரதியும் கண்ணம்மாவிடம் ஆவேசப்பட்டு பேசுகிறார்.
வேணும்னா இப்பவே வா நீ நான் என் பொண்ணு மூன்று பேரும் ஒரு ஹாஸ்பிடலுக்கு போயிட்டு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கலாம் என கண்ணம்மா கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட். இதற்கு பாரதி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.