ஒல்லிக்குச்சி உடல் வாகில் வாஇல் எப்போதுமே பீடியை வைத்துக்கொண்டு அக்மார்க் சென்னை பாஷையில் பேசி கவனிக்க வைப்பார் லூசு மோகன்.
இப்போதைப்போல் எல்லாம் அப்போது நகைச்சுவை நடிகர்களுக்கு லட்சத்தில் சம்பளம் இல்லை. வெறுமனே மூன்று ரூபாய் சம்பளத்தில் நடிக்கத் துவங்கிய லூஸ் மோகன் அதிகபட்சமாக ஒருநாளுக்கு மூவாயிரம் ரூபாய் சம்பளம் பெறும் அளவுக்கு முன்னேறினார்.
சரி இவருக்கு ஏன் லூசு மோகன் என பெயர் வந்தது தெரியுமா? ‘லூசு அண்ட் டைப்’ என்னும் நாடகத்தில் இவரது அப்பா நடித்ததால் மோகனுக்கு லூஸ் மோகன் என பெயர் வந்தது.
லூஸ் மோகன் 1944 ஆம் ஆண்டில் நடிக்க வந்தார். இவரது முதல் படம் ஹரிச்சந்திரா. சூரக்கோட்டை சிங்கக்குட்டி படம் இவர் சினிமா கேரியரில் முக்கியமானது.
இவர் கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு அழகி படத்தில் நடிகர் பாண்டுவுக்கு அப்பாவாக நடித்தார். வயோதிகம் காரணமாக அதன் பின்பு நடிக்கவில்லை லூஸ் மோகன்!