தமிழ் சினிமா உலகில் பிற மொழி நடிகைகள் ஆட்சி செய்கின்றனர் அந்த வகையில் கேரள பக்கத்திலிருந்து வந்து தமிழ் சினிமாவை கட்டி ஆளும் நடிகைகள் பலர். நயந்தாரா, பிரியங்கா அருள் மோகன், மாளவிகா மோகனன் போன்றவர்களை தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்திலிருந்து தமிழ் பக்கம் வந்தவர் இளம் நடிகை லட்சுமி மேனன்.
இவர் ஆரம்பத்தில் இருந்து தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் அந்த வகையில் சுந்தரபாண்டியன், கும்கி, குட்டி புலி, பாண்டிய நாடு ஜிகர்தண்டா, கொம்பன் போன்ற வெற்றி படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார் வெற்றியை ருசித்த இவர் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகரான அஜித்துடன் கைகோர்த்து வேதாளம் படத்தில் நடித்தார்.
அதன்பிறகு இவரது மார்க்கெட் பெரிய அளவில் பேசப்பட்டதோடு வாய்ப்புகளும் ஏராளமாக கிடைத்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நான் படிக்கப் போகிறேன் எனக்கூறி மேற்படிப்பிற்காக கேரளா சென்றார் அதன் பிறகு சினிமா பக்கமே தென்படாமல் இருந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் புலிகுத்தி பாண்டி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ஒன்னு ரெண்டு பட வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன. இந்த படங்களின் மூலம் விட்ட இடத்தை பிடிக்க லக்ஷ்மி மேனன் ரொம்ப அயராது நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை லட்சுமிமேனன்.
தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களைவிட உங்க அம்மா அழகாக இருக்கிறார்கள் எனக்கூறி கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.