தற்போதயை சீரியல்களில் ஹிட் லிஸ்டில் இருப்பது ரோஜா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள். இந்த இரண்டு தொடர்களிலும் நடிக்கிறார் வெங்கட்.
இந்த சீரியல்களுக்கு முன் இவர் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்க தொடங்கி பின் புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார்.
ரோஜா சீரியலை தாண்டி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது என்று கூறலாம்.
செம ஹேர் ஸ்டைலில் நடிக்கும் ஜீவாவின் நிஜ ஹேர் ஸ்டைலே வேறு. அவர் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.