பிக்பாஸ் ஜோடிகள் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ரம்யா கிருஷ்ணன்

3 years ago 347

விஜய் டிவியில் புதிய கான்செப்டாக பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டவர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி ’பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற பெயரில் தொடங்கியது. 

ஷிவானி நாராயணன், வனிதா விஜயகுமார், ஜித்தன் ரமேஷ், கேப்ரியல்லா, ஆஜீத், சென்றாயன், சோம்சேகர், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, தாடி பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் பங்கேற்றுள்ளனர்.

வாரம்தோறும் வீக் என்டில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தொடங்கியதும் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து ஊரடங்கு விதிக்கப்பட்டது. 

சீரியல் மற்றும் சின்னத்திரை சூட்டிங் நிறுத்தப்பட்டன. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஜீத், கேப்ரியல்லா, சென்றாயன் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டனர். இதனால், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

போட்டியாளர்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. சில வாரங்கள் கடந்த நிலையில், சிகிச்சை எடுத்துக் கொண்ட போட்டியாளர்கள் கேப்ரியல்லா, சென்றாயன் மற்றும் ஆஜீத் ஆகியோரும் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளனர். 

தமிழகத்திலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பிக்பாஸ் ஜோடிகள் சூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் நடுவராக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டு சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், "பிக்பாஸ் ஜோடிகள் சூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. அனைத்துவிதமான முன்னெச்சரிக்கைகளுடன், உரிய விதிமுறைகளை பின்பற்றி சூட்டிங் நடைபெறுகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், கட்டாயம் மாஸ்க் அணியுங்கள்" என பதிவிட்டுள்ளார். 

இதேபோல், போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் வனிதா விஜயக்குமாரும் பிக்பாஸ் ஜோடிகள் சூட்டிங்கிற்கு ’ஆன் தி வே’ என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். ஈரோடு மகேஷ் மற்றும் தீனா இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...