தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றவர்களும் உண்டு, கெட்ட பெயர் பெற்றவர்களும் உண்டு.
அப்படி நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்று வாய்ப்புகளை இழந்து நிற்பவர் தான் சக்தி. இயக்குநர் பி வாசுவின் மகனான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் போது போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியால் தனக்கு சுத்தமாக வாய்ப்புகள் வரவில்லை. விஜய் டிவி என்னை கெட்டவனாக காட்டி என் வாழ்க்கையை சீரழித்து விட்டது. வாய்ப்புகள் சுத்தமாக வரவில்லை. இதற்கு முன்னதாக எனக்கு முடியாதவர்கள் கூட தற்போது என்னை பார்த்தால் வேறு விதமாக நடந்து கொள்கிறார்கள் என கூறியுள்ளார்.