பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்

1 year ago 150

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சிவ நாராயணமூர்த்தி. வடிவேலு உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 66 வயதாகும் இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பவல்லி என்பவர் திருமணம் செய்து கொண்ட இவருக்கு லோகேஷ் மற்றும் ராம்குமார் என இரண்டு ஆண் பிள்ளைகள் ஸ்ரீதேவி என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

இவரது இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று மதியம் 12 மணி மேல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...