மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன்.
காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின் கவண், பா பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மட்டுமின்றி கன்னடத்திலும் நடித்து வரும் இவர் தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் இணைந்துள்ளார்.
வழக்கமாக தனது அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் இவர் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.