மாளவிகாவால் மனம் மயங்கும் ரசிகர்கள்.!

4 years ago 338

கேரளாவில் பிறந்து, மும்பையில் வளர்ந்த நடிகை மாளவிகா மோகனன் மலையாள படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் துல்கர் சல்மானின் பட்டம் போலே என்ற படத்தில் நடித்து பிரபலமானார். 

மலையாளம் மட்டுமல்லாது தமிழ், கன்னட மொழியில் உள்ள திரைப்படங்களிலிலும் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். 

கடந்த 2013 ஆம் வருடத்தில் இருந்து நடிக்க தொடங்கிய மாளவிகா மோகனன், நல்ல அறிமுகம் கிடைத்த திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை அளித்தது. 

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவு செய்துள்ள நடிகை மாளவிகா மோகனன், கருப்புநிறத்தினால் ஆன உடையை அணிந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது.