சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் உடல்நலம் தேறியுள்ளதாகவும் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி ரிலீசாக அண்ணாத்த படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் திருவிழா கொண்டாட்டத்திற்கு காத்திருப்பதை போல காத்திருக்கின்றனர்.
இதனிடையே கடந்த திங்கட்கிழமை டெல்லியில நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் கலையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தனது மகள் சவுந்தர்யாவின் ஹுட் ஆப்பிற்காக அண்ணாத்த படம் குறித்த வாய்ஸ் மெசேஜை ரஜினிகாந்த் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இது சாதாரண மருத்துவ செக்கப் தான் என்று ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரை மருத்துவமனையில் சந்தித்த நடிகர் ஒய் ஜி மகேந்திரனும் இதை உறுதிப்படுத்தினார். அண்ணாத்த ரிலீசுக்கு முன்னதாகவே ரஜினி வீடு திரும்புவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ரஜினிகாந்த் உடல்நிலை தேறியுள்ளதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மூளைக்கு செல்லும ரத்தக்குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு ரஜினிக்கு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர், தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாகவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டனர்.
எப்போதும் நல்ல சுறுசுறுப்புடன் காணப்படும் ரஜினிகாந்த், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து படங்களில் அவர் நடிக்க உள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது அவர் மருத்துவமனையில் உள்ளது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் வீடு திரும்ப அவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.