நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்ததாக வெளியான திரைப்படம் மாஸ்டர்.
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்திலுள்ள வீடியோ பாடல் ஏதாவது வெளியாகுமா என்று எதிர்பார்த்த நிலையில், தற்பொழுதுமாஸ்டர் படத்திலுள்ள குட்டி ஸ்டோரி வீடியோ பாடலை வெளிட்டுள்ளனர்.
இந்த குட்டி ஸ்டோரி பாடல் வெளியான 24 மணி நேரத்தில் ரௌடி பேபி பாடலின் சாதனையை முடியடிக்குமா என்று ரசிகர்கள் காத்துள்ளார்கள்.
அது என்ன சாதனை என்றால் 24 மணி நேரத்தில் அதிகம் பார்வையாளர்கள் பெற்ற வீடியோ பாடல் பட்டியலில் ரௌடி பேபி பாடல் தான் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடல் முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.