வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான புகைப்படங்கள்

4 years ago 242

நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.

இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . மேலும் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும், அம்மாவாக நடிகை சுமித்ராவும்  நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.மும்மரமாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் இன்று முதல் அஜித் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியான நிலையில் தற்போது பைக் சேஸிங் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது .

அதில் ஹெல்மட் அணிந்து கொண்டு பைக்கில் செல்லும் அஜித்தின் அந்த புகைப்படத்தையும் , வீடியோவையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.