ரஜினி நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த.சிவா - ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்தது.
உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் குறிப்பாக வெளிநாடுகளில் மட்டும் 1100 திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி தமிழில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.
அண்ணன் - தங்கை சென்டிமென்ட் கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் குறித்து பலதரப்பு கருத்துகள் வெளியாகி வருகிறது.
ஆனாலும் 70 வயதிலும் 90களில் பார்த்த அதே துள்ளல் அதே எனர்ஜியுடன் காட்சிக்கு காட்சி வசீகரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒருமுறை ஒரு முழு படத்தையும் தன் தோளில் சுமந்து ஒன் மேன் ஷோ காட்டி இருக்கிறார்.
அண்ணாத்த படம் எப்படி இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தினை கொண்டாடி வரும் நிலையில் வசூல் ரீதியாகவும் இந்த படம் சாதனை படைத்துள்ளது.
இதனிடையே அண்ணாத்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா அண்ணாத்த திரைப்படம் குறித்து தொலைக்காட்சி சிறப்பு நேர்காணலில் பங்கேற்றார்.
அதில், அண்ணாத்த குறித்த நெகடிவ் விமர்சனங்கள் என்னை பாதிக்காது என்றார். நடிகர் விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் உள்ளது நல்லதே நடக்கும் என்றார்.
நடிகர் விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் சிவா உதவி கேமராமேனாக பணிபுரிந்துள்ளார். அப்போது இருந்தே இருவருக்கும் உள்ளே நட்பு தொடர்ந்து வருகிறது என்ற சிறுத்தை சிவா வேதாளம் படத்தை பார்த்துவிட்டு என்னை நேரில் அழைத்து விஜய் பாராட்டினார் என்றும் தெரிவித்தார்.