வைகைப்புயல் வடிவேலுவின் மகளா இது? மாப்பிள்ளை யாருன்னு பாருங்க!

3 years ago 156

நகைச்சுவை நடிகர் வடிவேலுவை வெள்ளித்திரையில் நாம் பார்த்து சிலகாலம் ஆகிறது. ஆனாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் இதய சிம்மாசனத்தில் இருக்கிறார் வடிவேலு. 

இன்றும்கூட வடிவேலு நகைச்சுவையைப் பார்த்துவிட்டுத்தான் தூங்கும் மனிதர்கள் ஏராளம். அதுமட்டுமல்ல வடிவேலு சார்ந்து வரும் மீம்ஸ்களும் சோசியல் மீடியாக்களில் செம ட்ரெண்டிங் ஆகிவிடுகிறது. 

நீண்ட இடைவெளிக்குப் பின்பு நடிக்க விழுந்த ரெட் கார்டை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் தலைநகரம் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், ‘நாய் சேகர்’ என்னும் படத்தில் நடிக்கிறார் வடிவேலு. லைகா நிறுவனம் வடிவேலுவை வைத்து 5 படங்களைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளது.


நடிகர் ராஜ்கிரண் மூலமாகத்தான் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அறிமுகம் ஆனார் வடிவேலு. இம்சை அரசன், எலி என ஹீரோவாகவும் வடிவேலு ஒரு கலக்கு கலக்கிவிட்டார். இதுவரை நாம் வடிவேலுவைத்தான் பாத்திருக்கிறோம். முதன் முதலாக அவரது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படமும் இணையத்தில் வலம்வரத் துவங்கியுள்ளது.

நடிகர் வடிவேலுவுக்கு ஒரு மகனும், கார்த்திகா, கன்னிகா, கலைவாணி என மூன்று மகள்களும் உள்ளனர். இதில் தனது மகனுக்கு, ஒரு ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்துவைத்து தான் திரையில் மட்டும் தான் காமெடியன். நிஜத்தில் ஹீரோ என காட்டினார் வடிவேலு. 

இந்த லாக்டவுண் நேரத்தில் தனது மகள் கார்த்திகாவிற்கும் திருமணத்தை முடித்துள்ளார் வடிவேலு. அந்தத் திருமண விழாவில் எடுத்துக்கொண்ட படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.