40 வயதில் இரண்டாவது முறையாக கர்ப்பமான புகைப்படத்தை வெளியிட்ட கரீனா கபூர்

4 years ago 1720

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர் 40 வயதில்  கர்ப்பமாகியுள்ளார். தன்னுடன் இணைந்து நடித்த நடிகை கரீனா கபூரை 2012ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சைப் அலிகான். 

அவர்களுக்கு மூன்றரை வயதில் தைமுர் அலிகான் என்ற ஒரு மகன் இருக்கிறான்.  இப்போது கரீனா கபூர் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். 


இது பற்றிய தகவலை சைப்பின் சகோதரி சோஹா அலிகான் நேற்று வெளியிட்டார். தொடர்ந்து நடிகை கரீனா கபூரும் இந்த தகவலை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

 

இதனையடுத்து, பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.