1988ல் நடிக்க தொடங்கிய நடிகர் வடிவேலு கூட்டணி அமைக்காத நடிகரே கிடையாது என்று கூறலாம். அவர் இடையில் சில பிரச்சனைகளால் சினிமா பக்கம் வராமல் இருக்க இப்போது மீண்டும் ஒரு ரவுண்ட வர தொடங்கியுள்ளார்.
சினிமா பிரபலங்கள் பலருடன் நடிகர் வடிவேலுவுக்கு பிரச்சனை இருந்தது. இயக்குனர் ஷங்கர், விஜயகாந்த், சிங்கமுத்து என பலருடன் அவருக்கு பிரச்சனை இருப்பது நமக்கு தெரியும், அஜித்துடனும் பிரச்சனை இருந்ததாம்.
அஜித்தை வைத்த ராஜா என்ற படத்தை இயக்கியவர் எழில். இவர் தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டியில் பேசும்போது அஜித்-வடிவேலு பற்றியும் பேசியுள்ளார்.
ராஜா பட படப்பிடிப்பின் போது இருவருக்கும் சாதாரண பிரச்சனை இருந்ததாக பேசப்பட்டது, ஆனால் அப்போது படம் முடிக்கும் வேலையில் நான் இருந்தேன். எனக்கு தெரிந்த வரையில் இருவருக்கும் சாதாரண பிரச்சனை தான் இருக்கும் என பேசியுள்ளார்.
ராஜா தான் வடிவேலு கடைசியாக அஜித்துடன் இணைந்து நடித்த படம், அதன்பிறகு 19 வருடங்களாக இருவரும் இணையவே இல்லை.