அண்ணா மன்னிச்சிடுங்க.. விஜயகாந்திடம் சரணடைந்த வடிவேலு

3 years ago 325

விஜயகாந்த் மற்றும் வடிவேலு சண்டை பற்றி அறிந்திராதவர்கள் இந்த தமிழ்நாட்டில் உண்டோ. கடந்த பத்து வருடத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் வாழ்க்கை எந்த அளவிற்கு மாறியுள்ளது என்பதை அவர் சமீபத்தில் கண்கலங்கியபடி புலம்பிய போது தெரியவந்தது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அரசியலில் ஈடுபட்டார். எதிர்க்கட்சி அளவுக்கு உயர்ந்த விஜயகாந்த் கடைசியாக நடந்த தேர்தலில் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை. 

இந்நிலையில் நடிகர் வடிவேலு திமுக கட்சியுடன் சேர்ந்து கொண்டு விஜயகாந்தை பொதுமேடையில் மிகவும் தரக்குறைவாக பேசியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

என்னதான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பேசுவதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. அதையும் தாண்டி எல்லை மீறி பேசிய வடிவேலு அதன் பிறகு ஆளே அட்ரஸ் இல்லாமல் ஆகி விட்டார். 

கடந்த 8 வருடமாக வடிவேலு பெரிய அளவு படங்களிலும் நடிக்கவில்லை. அதே போல அவரும் நம்பிச் சென்ற கட்சியும் அவரை கைவிட்டது.

சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தியில் கூட கடந்த பத்து வருடமாக நான் லாக்டவுனில் தான் இருக்கிறேன் எனவும் என்னை தேடி படவாய்ப்புகள் வருவதே இல்லை எனவும் புலம்பியுள்ளார். நான் நன்றாக இருக்கும் போதும் ஏன் வாய்ப்பு வரவில்லை என தெரியவில்லை என கண் கலங்கியுள்ளார்.

 வடிவேலு, நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்ததாகவும், அதேசமயம் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க இருந்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு பின்னர் நடிக்க மாட்டேன் என தகராறு செய்ததாகவும் அவர் மீது நடிகர் சங்கத்தில் ரெட்கார்டு போடப்பட்டுள்ளது.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் வடிவேலு சமீபத்தில் நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்தை நேரில் சந்தித்து தேர்தலின்போது அவரைப் பற்றி அவதூறாக பேசியதற்கு தன்னை மன்னித்து விடும்படி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...